நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை ஒழிக்க மக்கள் விடுதலை முன்னணி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற அமர்விலேயே குறித்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்திருந்தார்.
மேலும் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி விடயங்களை கருத்திற்கொண்டே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்து செய்ய வேண்டிய அவசியத்தையும் அவர் தெளிவுபடுத்தினார்.
அத்தோடு குறித்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்து செய்ய சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்திருந்தார்.
அத்தோடு குறித்த பிரேரணையை இன்று மற்றும் நாளை விவாததிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்தை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்தமையின் ஓர் அங்கமாகவே இந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை ஜே.வி.பி. முன்வைத்துள்ளது.