யாழ்ப்பாணம் மயிலிட்டி மகா வித்தியாலயம் இரு வாரங்களுக்குள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
யுத்த காலத்தில் செயலிழந்து காணப்பட்ட மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.திறப்பு விழாவை தொடர்ந்து அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கினார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”மயிலிட்டி மகா வித்தியாலயத்தின் நிலை தொடர்பாக பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இன்று எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அதன்படி குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வித்தியாலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.