“புரட்டாசி சனி” என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.
இந்த வழிபாட்டை இன்று மக்கள் ஆர்வத்துடன் செய்து வருவதை அவதனிக்க முடிந்துள்ளது.