Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வடக்கு, கிழக்கு இணைந்த கூட்­டாட்­சிக்­குள் அதி­காரப் பகிர்வு

வடக்கு, கிழக்கு இணைந்த கூட்­டாட்­சிக்­குள் அதி­காரப் பகிர்வு

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்கு – கிழக்கு இணைப்­பைக் கைவிட்­டுள்­ளது. ஒற்­றை­யாட்­சிக் கட்­ட­மைப்­புக்கு இணங்கி விட்­டது என்று விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலை­யில், வடக்கு – கிழக்கு இணைந்த மாகா­ணத்­துக்­குள் கூட்­டாட்­சிக் (சமஷ்டி) கட்­ட­மைப்­புக்­குள்ளே அதி­கா­ரப் பகிர்வு ஏற்­பா­டு­கள் செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான தேர்­தல் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தேர்­தல் அறிக்கை வவு­னி­யா­வில் நேற்று வெளி­யி­டப்­பட்­டது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்­சித் தலை­வர்­க­ளின் கையெ­ழுத்­து­டன் தேர்­தல் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

தேர்­தல் அறிக்­கை­யில் அர­சி­யல் தீர்வு தொடர்­பில் கூட்­ட­மைப்­பின்
நிலைப்­பாடு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தமிழ் மக்­கள் தனித்­து­வ­மிக்க தேசிய இனம், வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­கள் தமிழ் பேசும் மக்­க­ளது பூர்­வீக வாழ்­வி­டங்­கள், தமிழ் மக்­கள் ஒரு தனித்­து­வ­மான மக்­கள் என்ற அடிப்­ப­டை­யில் சுய­நிர்­ணய உரி­மைக்கு உரித்­து­டை­ய­வர், கூட்­டாட்சி (சமஷ்டி) கட்­ட­மைப்­புக்­குள்ளே ஒன்­று­பட்ட வடக்­குக் கிழக்கு அல­கைக் கொண்ட அதி­கா­ரப் பகிர்வு ஏற்­பா­டு­கள் தொடர்ந்து செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

தமிழ் பேசும் முஸ்­லிம் மக்­க­ளும் பகி­ரப்­ப­டும் அதி­கா­ரப் பகிர்வு ஏற்­பா­டு­க­ளின் மூலம் நன்­மை­க­ளைப் பெற உரித்­து­டை­ய­வர்.பகி­ரப்­பட்ட இறை­யாண்­மை­யின் அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கப்­ப­டும் அதி­கா­ரப் பகிர்­வா­னது நிலம், சட்­டம் ஒழுங்கு, சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தல், தமிழ் மக்­க­ளின் பாது­காப்பு, சமூக – பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, வேலை­வாய்ப்பு, சுகா­தா­ரம், கல்வி, உயர்­கல்வி, தொழிற்­ப­யிற்சி, விவ­சா­யம், கைத்­தொ­ழில், கடற்­றொ­ழில், கால்­நடை அபி­வி­ருத்தி, மொழி, பண்­பாடு முத­லி­ய­வற்­றின் மீதும் உள்­நாட்­டி­லும், வெளி­நாட்­டி­லும் திரட்­டிக் கொள்­ளும் வளங்­கள் மற்­றும் நிதி அதி­கா­ரம் மீதான ஏனைய விட­யங்­கள் தொடர்­பா­ன­தா­க­வும் இருத்­தல் வேண்­டும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஒஸ்லோ உடன்­பாடு

தேர்­தல் அறிக்­கை­யில் ஒஸ்லோ உடன்­பாடு தொடர்­பா­க­வும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 2013ஆம் ஆண்டு மாகா­ண­ச­பைத் தேர்­தல் அறிக்­கை­யி­லும், 2015ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­தல் அறிக்­கை­யி­லும் கூறப்­பெற்ற இந்­தக் கொள்­கைத் திட்­ட­மா­னது 2002ஆம் ஆண்டு ஒஸ்லோ(நோர்வே) கொள்­கைப் பிர­க­ட­னத்­துக்கு ஒப்­பா­னது ஆகும்.

‘ஒன்­று­பட்ட இலங்­கைக்­குள் தமிழ்ப் பேசும் மக்­க­ளின் வர­லாற்று ரீதி­யி­லான வாழ்­வி­டப்­ப­கு­தி­க­ளில் உள்­ளக சுய­நிர்­ணய உரி­மைக் கொள்­கைப் பிர­கா­ரம் கூட்­டாட்சி (சமஷ்டிக்) கட்­ட­மைப்­பின் அடிப்­ப­டை­யி­ல­மைந்த தீர்­வொன்றை ஆராய்­தல்’ என்­ப­தா­கும்.

இடைக்­கால அறிக்கை

புதிய அர­ச­மைப்­பின் இடைக்­கால அறிக்கை மீதான விமர்­ச­னங்­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் தேர்­தல் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதில், இடைக்­கால அறிக்­கை­யா­னது, இணக்­கம் காணப்­பட்ட விட­யங்­கள், இணக்­கம் காணப்­ப­டாத விட­யங்­கள்; மற்­றும் இணக்­கத்­திற்­கா­கப் பேச வேண்­டிய விட­யங்­கள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கி உள்­ளது. இது, இறு­தித் தீர்­வுத்­திட்­ட­மல்ல என்­பதை நினை­வில் கொள்ள வேண்­டும். அப்­ப­டி­யி­ருக்­கை­யில் இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரிக்க வேண்­டு­மென்ற கூக்­கு­ரல் அறி­வு­ட­மை­யா­னது அல்ல.

இடைக்­கால அறிக்கை தொடர்­பில் எழுப்­பப்­ப­டும் வினாக்­கள்;, விமர்­ச­னங்­கள் உண்­மைக்கு மாறா­கப் புனை­யப்­பட்­டவை. இவை ஒரு­பு­ற­மும்;, ‘இடைக்­கால அறிக்கை நாட்;டைப் பிள­வு­ப­டுத்­தப் போகின்­றது’ என்ற கூச்­ச­லோடு தென்­னி­லங்­கை­யில் தேர்­தல்­கா­லப் பரப்­பு­ரை­கள் மறு­பு­ற­மும் இடம்­பெ­று­கின்­றன.

இலங்­கை­யில் நிலவி வரும் இனப்­பி­ரச்­சி­னைக்கோ, பிற பிரச்­ச­னை­க­ளுக்கோ தீர்வு காணக்­கூ­டிய திட்­டம் எது­வும் இல்­லாத சிலர், ‘தலை­மையை மாற்­ற­வேண்­டும்’ என்ற கூச்­சலை முன்­வைத்து வரு­கின்­ற­னர். இவர்­கள் தமி­ழர் விடு­த­லைக்­காக அர்த்­த­முள்ள செயற்­பா­டு­களோ திட்­டங்­களோ பங்­க­ளிப்போ அற்­ற­வர்­கள் என்­பதை மக்­கள் இனம்­கண்டு கொள்ள வேண்­டும்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் அர­சுக் கட்சி 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்­தல் மற்­றும் கொள்கை அறிக்­கை­க­ளி­லி­ருந்து ஒரு போதும் வில­கியோ, விட்­டுக் கொடுத்தோ செயற்­ப­டாது என்­பதை உறு­தி­யா­கத் தெரி­வித்­துக் கொள்­வ­தோடு இந்­தக் கொள்­கைத் திட்ட இலக்கை அடை­வ­தற்கு அனைத்து முயற்­சி­க­ளை­யும் செயற்­பா­டு­க­ளை­யும் மேற்­கொள்­ளும் என்­ப­தை­யும் தெரி­விக்­கின்­றோம், என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மக்­கள் ஆணை

தேர்­தல் அறிக்­கை­யில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பொறுப்­பும் கட­மை­யும் பற்­றி­யும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில், ஒரு­மித்த நாட்­டில், கூட்­டாட்­சிக் கட்­ட­மைப்­பில் தன்­னாட்சி அல­கு­கள் உரு­வாக்­கப்­பட்டு, அதி­கா­ரங்­கள் போதிய அள­வில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு, அவை எவ்­வ­கை­யி­லும் மீளப் பெற­மு­டி­யாத பாது­காப்­போடு அர­ச­மைப்­பில் இடம்­பெ­ற­வைப்;பது முதன்­மை­யான கட­மை­யாக இருக்­கி­றது என்று குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

அத்­து­டன், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் யாப்­பில் தமிழ் மக்­க­ளுக்கு உரித்­தான இறைமை, சுய­நிர்­ணய உரிமை, கூட்­டாட்­சிக் (சமஷ்டி) கட்­ட­மைப்­பில் கொழும்பு அர­சால் திரும்­பப் பெற­மு­டி­யாத, பாது­காப்­பான அடிப்­ப­டை­யில் பகி­ரப்­பட்ட அல்­லது கைய­ளிக்­கப்­பட்ட முழு­மை­யான அதி­கா­ரங்­கள் காணி, சட்­டம் ஒழுங்கு, பொரு­ளா­தார, சமூக, கலா­சார விட­யங்­கள், நிதி சம்­பந்­த­மான அதி­கா­ரங்­கள், வடக்­குக் கிழக்கு தமிழ் பேசும் மக்­க­ளின் பிர­தே­சங்­கள் இணைக்­கப்­ப­டு­தல், கூட்­டாட்­சிக் கட்­ட­மைப்­பில்; வடக்கு கிழக்கு மாகா­ணம் அல்­லது மாநி­லங்­க­ளுக்கு முழு­மை­யான பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரங்­கள் கொண்ட தன்­னாட்சி என்­பன முக்­கி­ய­மா­னவை ஆகும்.

வடக்கு கிழக்­கில் வாழும் தமிழ் மக்­கள் போர் முடி­வ­டைந்த பின்­னர் 2010ஆம் ஆண்­டி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குத் தங்­க­ளது ஆணையை வழங்கி வந்­துள்­ள­னர். ஒரு­மித்த நாட்­டுக்­குள் தங்­க­ளது இறை­யாண்­மை­யின் வெளிப்­பா­டா­க­வும் சுய­நிர்­ணய உரி­மை­யின் அடிப்­ப­டை­யி­லும் கூட்­டாட்­சிக் கட்­ட­மைப்­பி­லான அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வதே அந்த ஆணை­யா­கும்.

ஆத­ரவு தேவை

இந்த ஆணையை நிறை­வேற்­றும் பணி­யில் நாம் நீண்ட தூரம் கடந்து வந்­தி­ருக்­கி­றோம். முத­லில் ஆட்சி மாற்­றம் ஒன்றை ஏற்­ப­டுத்தி, அதன் பின் உரு­வாக்­கப்­பட்ட கூட்டு அரசு புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப் பணி­களை ஆரம்­பிப்­ப­தற்­கான அனைத்து அழுத்­தங்­க­ளை­யும் உள்­நாட்­டி­லும் பன்­னாட்டு ரீதி­யா­க­வும் ஏற்­ப­டுத்­தி­னோம்.

இப்­பொ­ழுது வெளி­யா­கி­யி­ருக்­கும் ஏழு உப­கு­ழுக்­க­ளின் அறிக்­கை­க­ளும் வழி­காட்­டுக் குழு­வின் இடைக்­கால அறிக்­கை­யும் ஆட்சி முறை­யில் ஏற்­ப­டுத்­தப்­பட இருக்­கும் அடிப்­ப­டை­யான மாற்­றங்­களை எடுத்­தி­யம்­பு­கின்­றன. இவை அனைத்­தும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உறு­தி­யான முயற்­சி­யால் அடை­யப்­பட்­டவை என்­ப­தில்; மாற்­றுக் கருத்­துக் கிடை­யாது. இம்­மு­யற்­சி­கள் தொட­ரப்­பட வேண்­டும். அதற்­குத் தொடர்ந்­தும் மக்­க­ளது ஆணை­யும் ஆத­ர­வும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கே இருக்­கின்­றன என்­பது இத்­தேர்­த­லி­லும் உறுதி செய்­யப்­பட வேண்­டும் – என்­றுள்­ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv