Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 34 வருடங்களின் பின் மீண்டும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரைப் பார்க்க படையெடுக்கும் பக்தர்கள்

34 வருடங்களின் பின் மீண்டும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரைப் பார்க்க படையெடுக்கும் பக்தர்கள்

பொத்துவில் பகுதியில் 34 வருடங்களின் பின் மீளவும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரைப் பார்க்க பெருந்திரளான பக்தர்கள் வருகைதருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

1984ஆம் ஆண்டு 60ஆம் கட்டை பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அங்கிருந்த பிள்ளையார் சிலையொன்றும் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது அப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தமது பூர்வீக நிலங்களில் குடியமர்வதற்கான தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொத்துவில் தமிழ் இளைஞர்களும், கனகர் கிராம மக்களும் இணைந்து, எடுக்கப்பட்ட பிள்ளையார் சிலையை நேற்று மாலை மீண்டும் குறித்த பகுதியிலேயே வைத்துள்ளனர்.

இதன்போது பிள்ளையார் சிலை, முன்பு வைக்கப்பட்டிருந்த அதே இலுப்பை மரத்தடியில் வைக்கப்பட்டு பொங்கல் படைத்து வழிபடப்பட்டுள்ளது.

மேலும் 34 வருடங்களின் பின் மீளவும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரை காண பெருந்திரளான பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv