யாழ். சாவகச்சேரி பகுதியில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிவில் உடையில் வந்த மானிப்பாய் பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இன்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த இரண்டு சந்தேகநபர்களிடமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.