Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்

தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணையை மீண்டும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்ளில் இருந்து தெரியவருகின்றது.

அதன் பிரகாரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 வரை அதிகரிக்கும் பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பிரேரணை தற்போது பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணைகள் மற்றும் நாளாந்தப் பணி நடவடிக்கையின் கீழ் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv