Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்! சரத் பொன்சேகா

பிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்! சரத் பொன்சேகா

பிரபாகரன் யுத்த வீரரா அல்லது பயங்கரவாதியா என்பது மக்களுக்குத் தெரியும் என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், நாட்டின் சட்டங்களுக்கு அமையவே பயங்கரவாதி யார், படைவீரன் யார் என்பது நிர்ணயம் செய்யப்படும்.

பிரபாகரன் யுத்த வீரரா அல்லது பயங்கரவாதியா என்பது மக்களுக்குத் தெரியும். இது தொடர்பில் யாரும் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள எவ்வித அவசியமும் கிடையாது.

எனவே, கருத்துக்களை வெளியிடும் போது நாக்கை கட்டுப்படுத்திக் கொண்டு கருத்து வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv