முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கடமையாற்றுவதால், நோயாளர்கள் மொழிப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றார்கள். இதே மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் பலர் இங்கு கடமையாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வடமாகாண சுகாதார அமைச்சரிடம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை மருத்துவமனையின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குண சீலன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே அமைச்சருக்கு இந்த விடயம் சுட்டிக்காட்டப் பட்டது. அமைச்சர் தெரிவித்தாவது: இதே மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் இங்கு கடமையாற்ற விரும்பி னால் அவ்வாறான மருத்துவர்களின் விவரங்களைக் கடிதம்மூலம் தெரிவித்தால், அவற்றுக்குத் தீர்வுக்கு கொண்டுவர முடியும்.
மாவட்ட மருத்துவமனையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட அனைவருக்குமான தகவல் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதில் மருத்துவமனையின் குறைபாடுகள் எழுத்து மூலம் சுட்டிக் காட்டப்படுமாகவிருந்தால் அந்தக் குறைகளைத் தீர்ப்ப தற்கு மருத்துவமனை அபி விருத்திக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனைக் காணிப் பிரச்சினை தொடர்பிலான பிணக்கு தீர்க்கப்பட் டுள்ள தாகவும், இனி மருத்துவமனையில் கட்டடங்ளைக் கட்டலாம் என்றும் அபிவிருத்திக்குழு தெரிவித்தது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களை இலகுபடுத்தும் நோக்கில் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கான ஒழுங்கு படுத்தல் மேற் கொள்ளப்பட்டுள்ளது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதில் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், மற்றும் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பூங்கோதை, மாவட்ட மருத்துவமனை மருத்துவ அதிகாரி கஜன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர் லோகேஸ்வரன் உள்ளிட்ட மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.