Home / சிறப்பு கட்டுரைகள் / உங்கள் குழந்தைகளை வடிவமைக்கும் சிற்பிகள் பெற்றோர்கள்

உங்கள் குழந்தைகளை வடிவமைக்கும் சிற்பிகள் பெற்றோர்கள்

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

உங்கள் குழந்தைகளை வடிவமைக்கும் சிற்பிகள் பெற்றோர்கள்

நம் குழந்தைகள் வாழ்வதும், வீழ்வதும் விதியின் கையிலோ, ஜோதிடத்தின் கையிலோ இல்லை. அது பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. குழந்தை பிறந்தது முதல் நினைவு தெரியும் வரையில் அது நம்மை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறது. நாம் சொல்வதை அது வேதவாக்காக எடுத்துக் கொள்கிறது.

ஆனால் மலையகத்தை பொருத்தவரை இதனைப் புரிந்து கொள்ளாமல் போனை எடுக்கும் குழந்தையிடம், ‘வீட்டில் அப்பா இல்லை’ என முதல் பொய்யை சொல்லச் சொல்லி அவர்கள் நேர்மையை சிறு வயதிலேயே கொன்று விடுகிறோம்.

இன்னும் சிலர் குடி, புகை, கணவன் மனைவி சண்டை போன்ற விஷயங்களை குழந்தையின் முன்னே நிகழ்த்தி அவர்கள் ஒழுக்கத்தையும், மரியாதையையும், ஏன் முன்னற்றத்தையும் கூட அழித்து விடுகிறார்கள்.

பொதுவாக குழந்தைகளை நாம் நினைக்கும் படியெல்லாம் வளர்ப்பது கடினம். நாம் நடந்து கொள்ளும் படியே அவர்கள் வளர்வார்கள் என்பது தான் உளவியல் ரீதியாக அனைவரும் கண்ட உண்மை. இது இப்படி இருக்க மலையக பிரதேசங்களில் பல அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப நலம் பற்றி பாரிய செயற்றிட்டங்களை முன்னெடுத்து சென்றாலும் அவற்றை நம் மக்கள் பொருட்படுத்துவது கிடையாது.

நீங்கள் அடித்தால் அவர்களும் அடிப்பர், நீங்கள் படித்தால் அவர்களும் படிப்பர்.

நீங்கள் படுக்காமல் அவர்களை தூங்க வைக்க முடியாது, நீங்கள் டீவி பார்த்து கொண்டு அவர்களை படிக்க சொல்ல முடியாது.

சச்சின் டெண்டுல்கர் பலருக்கு ரோல் மாடலாக இருக்கலாம், ஆனால் அவரின் ரோல் மாடல் அவர் தந்தையே. சச்சின் மட்டும் அல்ல, உலகின் பெரும்பாலான சாதனையாளர்களிடமும் நீங்கள் இந்தப் பதிலையே கேட்க முடியும். அப்படியானால் மலையக சிறுவர்களுக்கும் முதல் ரோல் மாடல் தன் அப்பாக்கள் தானே. பொற்றோர்களின் கூடாத பழக்கவழக்கங்கள் தான் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்றமைக்கு அடிப்படை காரணம் என்றால் மிகையாகாது.

இந்த வகையில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. அதாவது உங்கள் குழந்தைகளை உங்களைத் தவிர யாரையும் ரோல் மாடலாக எடுத்து கொள்ள அனுமதிக்காதீர்கள்.

ஏனெனில் அவர்கள் ரோல் மாடலென நினைக்கும் அந்த நடிகர் வருங்காலத்தில் தீவிரவாதி ஆகலாம், குற்றவாளி ஆகலாம், பாலியல் வன் கொடுமை குற்றவாளி என பிற்காலத்தில் அறியப்படலாம். ஒருவேளை அரசியல்வாதியாக இருந்தால் ஊழல் குற்றவாளி எனத் தெரிய வரலாம். எனவே அந்த ஏமாற்றத்திற்கு அவர்களை ஆளாக விடாதீர்கள்.

மேலும் நேரில் பார்க்கும் தன் பெற்றோரையோ, ஆசிரியரையோ விட புத்தகத்திலோ திரையிலோ பார்க்கும் மனிதர்களால் பெரிதான தாக்கத்தை ஒரு குழந்தையின் மனதில் நிகழ்த்தி விடவே முடியாது.

மொத்தத்தில் நம் குழந்தைகளுக்கு பொற்றோர்களே சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும்.

ஆம்! உங்கள் குழந்தைகளை வடிவமைக்கும் சிற்பிகள்…

அது நீங்க தாங்க!

நன்றி.

ராஜ்_ மலையகம்

Check Also

Today palan 10.07.2020 | இன்றைய ராசிபலன் 10.07.2020

Today palan 10.07.2020 | இன்றைய ராசிபலன் 10.07.2020

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …

You cannot copy content of this page