இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதில் சில காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருப்பினும் மக்களின் பாதுகாப்பிற்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 120 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
5 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் பள்ளிகளை மூட அரசே உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக எல்லையில் பயங்கரவாத தாக்குதலும், பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது.
இதனால் இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.