தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல பேர் இருக்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என கமிட்டானார். சமீபத்தில் கூட காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.
இவர் சிம்புவுடன் இணைந்து புத்தாண்டிற்கு ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தில் இவருடன் நடிகர் விமல் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக போகிறது என்று கூறுகிறார்கள்.
அதிலும் ஓவியா தான் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். இவ்வாறு இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
![](http://tamilaruvi.news/wp-content/uploads/2018/02/oviya-tweet-300x200.jpg)