Saturday , November 16 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எமது தலைவர்கள் இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லை

எமது தலைவர்கள் இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லை

இலங்கையின் அரசியல் நிலைமையை தீர்மானிப்பவர்களாக பௌத்த மதகுருமார் விளங்குவதாகவும் , தமிழ் தலைமைகள் இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லையென்றும் வட மாகாண முன்னாள் மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன் மற்றும் அனந்தி சசிதரனுக்கும் இடையில் இன்று கிளிநாச்சி சோலைவனம் ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தலைமைகள் இதுவரையில் தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்து சர்வதேசத்திற்கு உண்மையை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளதாகவும், ஆனால், ஒரேயொரு பௌத்த தேரார் தற்போது அரசியலில் தனது ஆதிக்கத்தை எவ்வாறு காண்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இஸ்லாமிய தலைவர்களிடம் தமிழ் அரசியல் தலைமைகள் இன ஒற்றுமை உள்ளிட்ட பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அனந்தி கூறியுள்ளார்.

அத்துடன் முஸ்லிம் தலைமைகளின் தீர்மானங்கள் அவர்களின் இனத்தின் நலன் சார்ந்ததாகவே அமைந்தததாகவும், ஆனால் எமது தலைவர்கள் அவ்வாறு இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லை எனவும் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv