Saturday , August 23 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தர்மயுத்தம் தொடங்கும் முன்பே என்னை சந்தித்தார் ஓபிஎஸ்: குருமூர்த்தி

தர்மயுத்தம் தொடங்கும் முன்பே என்னை சந்தித்தார் ஓபிஎஸ்: குருமூர்த்தி

முன்னாள் முதல்வரும் இந்நாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு தர்மயுத்தம் என்ற பெயரில் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தர்மயுத்தம் தொடங்குவதற்கு முன்னர் தன்னை அவர் சந்தித்ததாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் அவர்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவுடன், தன்னை சந்திக்க வேண்டும் என்று ஒரு நண்பர் மூலம் தூது அனுப்பியதாகவும், நான் அதற்கு சம்மதித்ததாகவும் கூறிய குருமூர்த்தி, தன்னிடம் மனம் ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது என்றும், என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றும் ஓபிஎஸ் கூறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

அதற்கு தான், ‘மனதில் உள்ளதை வெளிப்படையாக மக்களிடம் பேசிவிடுங்கள், அப்போதுதான் அரசியலில் தெளிவு பிறக்கும் என்று தான் அறிவுரை வழங்கியதாகவும், அதன் பின்னரே ஓபிஎஸ் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தர்மயுத்தத்தை தொடங்கியதாகவும் குருமூர்த்தி கூறியுள்ளார். இதுவரை வெளிவராத இந்த தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv