Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஒரு லட்சம் ரூபா செலுத்தினால் வாழ்க்கை முழுதும் மது இலவசம்!

ஒரு லட்சம் ரூபா செலுத்தினால் வாழ்க்கை முழுதும் மது இலவசம்!

ஒரு லட்சம் ரூபா செலுத்தினால் நீங்கள் வாழ்நாள் முழுதும் மது குடிக்கலாம். சீனாவில் ஷாங்காய் பகுதியில் நடைபெறும் வர்த்தக திருவிழாவை முன்னிட்டு பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவது வழக்கம்.

இந்நிலையில் ஷியங் ஷியோ போல் என்ற மது கம்பெனி தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது. இன்று ரூ,1 லட்சம் முன் பணம் செலுத்துபவர்களுக்கு ஆயுள் முழுவதும் மது வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த சலுகை 99 அதிர்ஷ்டசாலிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு ஆண்டுதோறும் 12 பெட்டிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு பெட்டியிலும் 12 பாட்டில்கள் இருக்கும்.

ஒருவேளை வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுக்குள் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினருக்கு ஒருவருக்கு இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற சீன மக்கள் போட்டிபோட்டு வருகின்றனர்

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …