நவம்பர் 18 பிரதமர் யார் ?
ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் தானும் அமைச்சராகுவேன் என்று எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும், தற்போதுள்ள அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு கருத்துக்களும் பொதுமக்கள் மத்தியில் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன, மேலும் சிலர் அந்த கருத்துக்களை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அதன் காரணமாக இது தொடர்பான சட்ட நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு மறுநாள் அமைச்சரவை மற்றும் பிரதமரும் மாறலாம் என்று நினைப்பவர்கள் அவ்வாறு நினைப்பதற்கான காரணம் மைத்ரிபால சிறிசேன 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி அன்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பிரதமர் தி.மு ஜயரத்னவை பதவியில் இருந்து நீக்கி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்ததை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டே இவ்வாறு நிறைகிறார்கள் என தெளிவாகிறது.
2015 ஜனவரி 09ம் திகதி நிலவரப்படி 19ம் திருத்த சட்டம் நடைமுறையில் இருக்கவில்லை. எனவே, ஜனாதிபதி எந்த நேரத்திலும் பிரதமரை நீக்க முடியும்.
எவ்வாறாயினும், இந்த அதிகாரம் 19 ஆவது திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றாலும் பிரதமரை நீக்கவோ அல்லது புதிய பிரதமரை நியமிக்கவோ ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை.
மகேஷ் சேனாநாயக்க அல்ல, கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் குறுகிய காலம் பணியாற்ற வேண்டியது தவிர்க்க முடியாதது.
இதற்கமைய எஸ்.பி திஸாநாயக்கவின் 18ம் திகதி அமைச்சராகுவதற்கான கனவு கலைவதுடன், மகேஷ் சேனாநாயக்க ஜனதிபதியானால் மட்டும் தொடர்ச்சியாக ரணில் பிரதமராக இருப்பார் என்று கூறுவது தவறு ஆகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற வேண்டியதுடன், இல்லையெனில், பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து நான்கரை ஆண்டுகள், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய நாடாளுமன்றம் நியமிக்கப்பட வேண்டும்.
இவை எதுவும் நடக்கவில்லை என்றால், ரணில் விக்ரமசிங்க ராஜினாமா செய்யாவிட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு ஜனாதிபதியும் அவருடன் பணியாற்ற வேண்டும்.