நோர்வே நிடேல்வா(nidelva ) பகுதியில் தமிழ் மாணவன் ராகவன் ஜீவகரன் வயது 21, திங்கள் அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,ராகவன் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான எந்த சான்றுகளும் இல்லை.
ராகவன் ஆகஸ்ட் 15 முதல் காணாமல் போயிருக்கின்றார். அதன் பின்னர் அவரது சடலத்தை போலீசார் நிடேல்வா(nidelva ) பகுதியில் திங்கள் இரவு அன்று பழைய பாலத்தின் கீழே கண்டுபிடித்தனர்.
செவ்வாய்கிழமையன்று அச் சடலம் ராகவன் உடையது தான் என்று அவரது தொலைபேசி மற்றும் அடையாளஅட்டை மூலம் உறுதிப்படுத்தினர்.
ராகவன் துரண்ணியம் (trondheim ) உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் காணாமல்போவதற்கு முன்பு நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்துக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறார். வீடு செல்லும் முன்பு தனது நண்பர்களிடம் சொன்ன கடைசி விஷயம்: “நாளைக்கு நான் எதிர்பார்த்திருக்கிறேன்.”
அதன் பின்னர் தனது சகோதரிக்கு ” நான் வீட்டிற்க்கு விரைவில் வந்துவிடுகிறேன்” என்று எல்கெஸ்ட்டர் (Elgeseter bro ) என்ற பாலம் உள்ள பகுதியில் வைத்து குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அப் பகுதி அவர் வசிக்கும் அடுக்குமாடியின் சில மீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தான் அவர் காணாமல் போயிருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.
https://www.youtube.com/watch?v=soRaxDRzFE0