(திருத்தம்) உலகின் முதலாவது மகிழ்ச்சியான நாடக நோர்வே தெரிவு!
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் பிணையம் தனது 2017 ஆம் ஆண்டின் அறிக்கையை
போன புதன்கிழமை வெளியிட்டது.அதன்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நோர்வே முதலாவது இடத்தைப் பிடித்துக்கொண்டது.
புதிய பட்டியலின் படி நோர்வே முதலாவது இடத்தையும் டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து இரண்டாம் மூன்றாம் இடத்தையும் சுவிச்சர்லாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன.
157 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி,மக்கள் தங்கள் வாழ்க்கையை 0 இல் இருந்து 10 வரையான புள்ளியின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர்.அதன்படி உலகின் மிகவும் குறைந்த சராசரி புள்ளி 5 .1 ஆகும்.போன வருடம் டென்மார்க் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
உலகின் மகிழ்ச்சியான 10 நாடுகளின் பட்டியல்
1. நோர்வே
2. டென்மார்க்
3. ஐஸ்லாந்து
4. சுவிச்சர்லாந்து
5. பின்லாந்து
6. நெதர்லாந்து
7. கனடா
8. நியூசிலாந்து
9. ஆஸ்திரேலியா
10. ஸ்வீடன்
உலகின் மகிழ்ச்சி குறைந்த 10 நாடுகளின் பட்டியல்.
1. ஏமன்
2. தெற்கு சூடான்
3. லைபீரியா
4. கினி
5. டோகோ
6. ருவாண்டா
7. சிரியா
8. தான்சானியா
9. புருண்டி
10. மத்திய ஆப்பிரிக்க குடியரசு