குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையடுத்து நாடு முழுவதும் பாஜகவின் வெற்றிக்களிப்பில் உள்ளனர்.
அதிலும் தமிழக பாஜகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காலை முதலே படு சுறுசுறுப்பாக சமூக வலைதளங்களில் இயங்கி வருகிறார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தார் பட்டேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் பட்டேல்.
இவரது அதிரடியான விமர்சனங்கள், பிரச்சாரங்களை பார்த்து பாஜகவே நடுங்கியது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியது ஹர்திக் பட்டேலின் பிரச்சாரங்கள்.
பிரதமரின் சொந்த மாநிலமும், பாஜகவின் கோட்டையுமான குஜராத்தில் அந்த கட்சியை வீழ்த்த காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுத்தும் முடியாமல் போய்விட்டது. அந்த கட்சி பெரும்பான்மையை பெற்றுவிட்டது.
இந்நிலையில் ஹர்திக் பட்டேல் சேர்ந்ததால் தான் காங்கிரஸ் தோற்றது என பொருள்படும் படி ஹர்த்திக் பட்டேல் வடநாட்டு வைகோ என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். அதே நேரத்தில் வைகோவையும் எச்.ராஜா இதில் சீண்டியுள்ளார்.