சுவிட்சர்லாந்து: ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில் பேசிய அமெரிக்காவுக்கான வடகொரியா தூதர் ஹான் டே வடகொரியா மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது என்றார்.
மீண்டும் மீண்டும் வடகொரியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா கலங்கம் விளைவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன் பலனை அமெரிக்கா விரைவில் உணரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து அரங்கேற்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகளை ஏற்படுத்த அமெரிக்கா வரைவு தீர்மானம் ஏற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்தது.
வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தீர்மானத்திற்கு 15 உறுப்பு நாடுகளும் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து வடகொரியா மீது மேலும் 3 பொருளாதார தடைகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=-24SUvHlzAw