Monday , November 18 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / வட கொரியாவுக்கு ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

வட கொரியாவுக்கு ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

வட கொரியாவுக்கு ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

உலக நாடுகளின் தடையை புறக்கணித்து தொடர்ந்து ஆபத்தான ஏவுகணைகளை பரிசோதித்து வரும் வட கொரியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நான்கு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்தது. அடுத்தடுத்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாகவும் தென் கொரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சுமார் ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணைகள் 260 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சென்று திட்டமிட்ட இலக்கை தாக்கியதாக செய்திகள் வெளியாகின.

ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாகவே இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்திருந்தது.

இதைப் போன்ற ஆத்திரமூட்டும் செயல்பாடுகளை வட கொரியா கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்டரெஸ் குறிப்பிட்டிருந்தார்.

வட கொரியாவின் இந்த பேரழிவுப் பாதையை இந்த உலகம் அனுமதிக்காது என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதரும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின்மீது தாக்குதல் நடத்தப் போவதாக வட கொரியா மிரட்டியுள்ள நிலையில் இந்த நெருக்கடியை சமாளிக்கவும் வட கொரியா மீது மேலும் புதிய தடைகளை விதிக்கவும் வட கொரியாவின் தொடரும் அத்துமீறல் தொடர்பாக விவாதிக்கவும், அந்நாட்டுக்கு எதிராக மேலும் சில புதிய தடைகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கவும் ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அவசரமாக கூடியது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் (உள்நாட்டு நேரப்படி) காலை பத்து மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்க அரசு தயாரித்த அறிக்கையை பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஆதரித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் முந்தைய தீர்மானங்களுக்கு எதிராகவும், தொடர்ந்து பெருமளவிலான அத்துமீறலாகவும் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்திவரும் வட கொரியாவுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்போம் என அறிவித்துள்ளதன் மூலமாக பிராந்தியத்தில் பதற்றத்தையும் ஆயுதப் போட்டியையும் வட கொரியா அதிகரிக்க செய்துள்ளதாகவும் இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …