கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அரசியல் பிரவேசத்தையும் கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தனது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மக்களுடனும் தன்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக சில ஏற்பாடுகள் நடப்பதாகவும் அதுபற்றிய அறிவிப்பு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என வார இதழ் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நவம்பர் 7-ந்தேதி கட்சி அறிவிப்பு இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம். பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்.