பெண் பத்திரிக்கையாளர்களை குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார் எஸ்.வி.சேகர். இதையடுத்து தமிழகம் முழுக்க எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்ததால், சில நாட்கள் தலைமறைவாகியிருந்தார் எஸ்.வி.சேகர்.
அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்ததுடன், கைது செய்ய தடையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளதுது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.