Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல்

பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல்

பிரபல சாமியார் நித்தியானந்தா போல டப்மேஷ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரபல சாமியார் நித்தியானந்தாவுக்கு பெங்களூரு அருகே ஆசிரமம் உள்ளது. இவரது சமீபகால ஆங்கில பேச்சை சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்து  வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை பிரியா பவானிசங்கர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நித்தியானந்தா போல டப்மேஷ் செய்து அதனை பகிர்ந்தார்.

இந்த வீடியோவுக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள், ‘விளம்பரத்துக்காக இப்படி கேவலமான செயலை செய்துள்ளீர்கள். சுவாமிஜி உங்களை போல அல்ல. மக்கள் அவரை விமர்சித்தாலும் அவர் நல்லது செய்வதை நிறுத்தவில்லை’ என விமர்சித்துள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv