நடந்த உள்ளூராட்சி தேர்தலில் தோல்வியால் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசங்க விலகிமாறும், கரு ஜயசூரியவை அப்பதவியை ஏற்க அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம், ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இதேபோல் , ஐ.தே.க. அமைச்சர் சுஜீவ சேனசிங்கவும் மைத்திரியிடம் ரணிலை பதவியில் இருந்து விலக்குவது குறித்து பேசியது குறிப்பிடதக்கது.