Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தாமிரபரணி ஆற்றில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தாமிரபரணி ஆற்றில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கீழ் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய், ஆகிய ஏழு கால்வாய்களின் கீழ் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகள் உள்ளன.

இந்த பாசன பரப்புகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்த தேக்கங்களில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வரும் 24-ம் தேதி முதல் 21.10.2018 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இதனால் விவசாயிகள் பெரும் பயனடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இதனால் அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் 20,729 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv