Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2017 – பிரித்தானியா

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2017 – பிரித்தானியா

விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2017 பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் நடைபெற்றது
நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் ஏற்றிவைத்தார். பிரித்தானிய தேசிய கொடியினை இளையோர் அமைப்பு கிரிஷ் சபாபதி ஏற்றி வைத்தார் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை அனைத்துலக செயலக பொறுப்பாளர் பொ.மகேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

ஈகைச்சுடரினை 1992 ம் ஆண்டு வீரசவினை தழுவிக்கொண்ட முல்லைக் கோட்ட சிறப்பு பொறுப்பாளர் மேயர் செங்கோல் மற்றும் 1989 ம் ஆண்டு நாட்டு பற்றாளர் பொன்னுத்துரை ரஸா அவர்களின் சகோதரனுமான பொன்னுத்துரை சுதன் அவர்கள் ஏற்றிவைத்தார் . ஏற்ற சம நேரத்தில் கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகள் அவர் தம் உறவுகளுக்காக சுடரேற்றினார்கள்.

நிகழ்வில் தொடந்து எழிச்சி கானங்களோடு உணர்வோடு உறவுகள் கையில் காந்தள் மலர்களோடு அஞ்சலி செலுத்தினார்கள் . மனதில் இருக்கும் கனங்களை கவிதைகளாகவும் , எழுச்சி நடனங்கள் , எழுச்சி உரைகள் , இளையோர் அமைப்பு உரை , தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக சிவந்தன் சிறப்புரை , மாவீரர் நாள் சிறப்பு உரையினை ஊடகவியலாளர் ச. ச. முத்து ஆற்றினார் . தேசிய கொடிகள் கையேந்தலுடன் தமிழீழம் கிடைக்கும் வரை மாவீரர்களின் வழி தொடர்ந்து பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நிகழ்வு நிறைவு பெற்றது .

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv