Sunday , August 24 2025
Home / முக்கிய செய்திகள் / அமெரிக்கா செல்ல முற்பட்ட நாமலுக்கு நேர்ந்த கதி

அமெரிக்கா செல்ல முற்பட்ட நாமலுக்கு நேர்ந்த கதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மொஸ்கோவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்ஷவை, எமிரேட்ஸ் எயர்லைன் விமான சேவை நிறுவன அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் நாமல் தற்போது நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய செல்லுபடியாகும் அமெரிக்க விசாவை கொண்டிருந்த போதிலும், நாமலின் விஜயம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உறவினர் ஒருவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்பதற்காக நாமல் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv