வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவ திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, எம்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.