Wednesday , November 20 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / என் வழி நியாயமான வழி : ரஜினி மீண்டும் அறிக்கை

என் வழி நியாயமான வழி : ரஜினி மீண்டும் அறிக்கை

ரஜினி அரசியல் வருகையை உறுதி செய்து மக்கள் மன்ற் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வந்த போது திடீரென தனது ரசிகர் மன்ற செயலாளராக லைகாவில் பணிபுரிந்த மகாலிங்கம் நடராஜன் என்பவரை நியமித்தார். மன்றத்திற்கு சிறிதும் சம்மந்தம் இல்லாத மகாலிங்கத்திற்கு இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கிய போதே ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு உருவானது. மேலும் மாவட்ட வாரியாகவும் முக்கியப்பொறுப்புகளில் உள்ளவர்களும் ரஜினியின் நீண்டகால ரசிகர்கள் இல்லை எனவும் கூறப்பட்டு வந்தது.

இத்தகையக் கருத்துகளால் எரிச்சலடைந்த ரஜினி அவதூறுகளுக்கு மறுப்புத் தெரிவித்து 2 நாட்களுக்கு முன்னால் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘இந்த நடவடிக்கைகள் அனைத்தும் என் ஒப்புதலுடனேயே மேற்கொள்ளப்பட்டன. 30, 40 வருடங்கள் ரசிகராக இருந்ததாலெயே ஒருவர் பதவிக்கும், அரசியலுக்கும் தகுதியானாராக இருப்பார் என சொல்ல முடியாது. ரசிகர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு அரசியலில் வெல்ல முடியாது . மக்கள் செல்வாக்கும் வேண்டும் அப்போதுதான் வெற்றிப் பெற முடியும்’ என தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியைப் போக்கும் வகையில் இன்று ரசிகரகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரசிகர்களை மீண்டும் மன்றத்தில் சேர்ப்பது குறித்தும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தன் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடனான ஆலோச்னை முடிந்து ரஜினி கூறியதாவது:

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நான் கூறியது கசப்பானதாக இருந்தாலும் அதில் உள்ள உண்மை நியாயமானதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. மன்ற செயல்பாடுகள் குறித்து உண்மைகள் தான் கூறியிருந்தேன். என்னையும் உங்களையும் யாராலும் எந்தக் சக்தியாலும் பிரிக்க முடியாது.நான் எந்த பாதையில் சென்றாலும் அந்தப்பாதை நியாயமானதாக இருக்கும் உங்களைப்போன்ற ரசிகர்களை கிடைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். நாம் எந்த பாதையில் சென்றாலும் அந்தப்பாதை நியாயமானதாக இருக்கட்டும் .இவ்வாறு அதில் தெரிவித்திருக்கிறார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv