ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜபக்ஷ ரெஜிமென்டின் மூலம் மைத்திரிக்கு ஆபத்தான நிலை உள்ளதாக அவருக்கு நெருக்கமான அரசியல்வாதி வெளியிட்ட தகவல் மூலம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதி கொலை செய்யப்பட்டால் மிகவும் ஆபத்தான நிலைமை ஒன்று நாட்டில் ஏற்படும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பு மோசமான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைதத்மை தொடர்பிலான மனு விசாரணை தீர்ப்பு வழங்கும் திகதி அறிவிக்காமல் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அவ்வாறான நிலையின் கீழ் ஜனாதிபதியை கொலை செய்ய சூழ்ச்சியாளர்கள் சூழ்ச்சிகளை மேற்கொண்டால் நாட்டிற்கு என்ன நடக்கும்.
அவ்வாறாறு நடந்து விடக்கூடாதென நான் கடவுளை வேண்டிக்கொள்கின்றேன். நீதிபதிகள் இவை குறித்து சிந்திக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷர்களுடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டிருக்கும் டளஸ் பெருமவின் கருத்தின் பின்னணியில் பல மர்மங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.