Sunday , November 17 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கட்சி சின்னத்தை விட்டுக்கொடுத்த மும்பை தமிழர் பாசறை அமைப்பு

கட்சி சின்னத்தை விட்டுக்கொடுத்த மும்பை தமிழர் பாசறை அமைப்பு

நடிகர் கமல்ஹாசனின் கட்சிக்கொடியில் உள்ள லோகோ ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின் லோகோவை போலிருக்கிறது என்ற கருத்து வெளியாகிய நிலையில் அந்த லோகோவின் சொந்தக்காரர்களான மும்பை தமிழர் பாசறை அமைப்பு தற்பொழுது அதனை கமலுக்காக விட்டுக்கொடுத்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21-ந் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கி, தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.

மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். கமல்ஹாசன் கொடியில் உள்ள கைகள் இணைந்த உருவம், ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின் லோகோ போன்று இருப்பதாக கருத்துகள் வெளியாகின.

இந்நிலையில் அந்த லோகோவின் சொந்தக்காரர்களான மும்பை தமிழர் பாசறை அமைப்பு தற்பொழுது அதனை கமலுக்காக விட்டுக்கொடுத்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய மும்பை தமிழர் பாசறை நிர்வாகி ராஜேந்திரசாமி, எங்களின் கட்சியின் கொடியில் உள்ள சின்னமும் கமல்ஹாசன் பயன்படுத்திய கொடியின் சின்னமும் ஒரே மாதிரியாக இருந்தது. கமல்ஹாசன் ஒரு ஜனநாயக கோவில் கட்ட எங்களின் சின்னத்தை பயன்படுத்த இருக்கிறார். அதனால் இந்த சின்னத்தை பயன்படுத்த புரிந்துணர்வு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளோம் என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv