Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புலுதிப்புயலுக்குள் சிக்கியது முல்லைத்தீவு

புலுதிப்புயலுக்குள் சிக்கியது முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் நகர்பகுதி இன்று புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தந்த உலங்குவாணூர்தி ஒன்று தரை இறக்கம் செய்யப்படும் போதே இவ்வாறு புலுதிப்புயல் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் இன்று காலை 10.30 மணியளவில் குறித்த உலங்குவாணூர்தி தரை இறக்கம் செய்யப்பட்டது.

இதன்போது குறித்த மைதானத்தில் காணப்பட்ட கிரவல் தூசிகள் உள்ளிட்டவை புயல்போல் எழுந்து பிரதான வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முற்றும் முழுதாக மண்தூசிக்குள் மூழ்கியது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv