முல்லைத்தீவு – சிராட்டிகுளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் தாய் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த யோகராசா சரஸ்வதி (வயது 52) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த தாயின் மகன் யோகராசா துசியந்தன் (2018) க பொ த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் சுகயீனம் காரணமாக கடந்த 17ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில், குறித்த தாயாரின் சடலம் வீட்டில் இருந்து சுமார் 800 மீற்றர் தூரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாந்தை கிழக்கு பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.