பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5 பிள்ளைகளின் தாய்
யாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பிள்ளைகளின் தாய் ஒரு சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதான சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த வேளை பாம்பு தீண்டியுள்ளது.
இதனக்கண்ட கணவர் உடனடியாக மனைவிக்கு முதலுதவி செய்த பின்ன்னர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த பெண் கடந்த 27ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்று மாலை குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட உடற்கூற்று பரிசோதனையின் பின்ன்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளநிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.