மோடி மற்றும் ஜெட்லி மீது சசிகலா கடும் அதிருப்தி
பார்லிமென்டில் கடந்த 9ம் தேதி, கிடைத்த சில நிமிடங்களில் மோடியிடம், சசிகலாவுக்கே பெரும்பான்மை இருக்கிறது. அவரையே ஆட்சி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தம்பித்துரை கேட்டுள்ளார். அதற்கு பிரதமர், எதுவாக இருந்தாலும் கவர்னர் முடிவெடுப்பார் எனக் கூறிவிட்டார்.
பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியும், இணக்கமான பதில் கிடைக்காத வருத்தத்தில் இருந்த, துணை சபாநாயகர் தம்பிதுரை, அடுத்ததாக, மத்திய நிதியமைச்சர், அருண் ஜேட்லியையும், கடந்த 9ம் தேதி சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளார்.
கைவிரித்த ஜெட்லி:
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அருண் ஜெட்லி, நீங்கள், துணை சபாநாயகராக என்னிடம் பேசுகிறீர்களா… சசிகலாவின் பிரதிநிதியாக பேசுகிறீர்களா… என்று கேட்டுள்ளார்.சசிகலாதான் தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும்; அதற்கு நீங்கள் உதவ வேண்டும்; பிரதமர் மோடியிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கூற, இந்த விஷயத்தில், கவர்னர்தான் முடிவெடுக்க வேண்டும். அவர், சட்ட வல்லுநர்களை கலந்து கொண்டு, நியாயப்படி நடப்பார்.
இந்த விஷயத்தில், உங்களுக்கு உதவ முடியாத சூழலில் உள்ளேன் என்று சொல்லி அனுப்பினாராம். இதை அறிந்ததும், சசிகலா, மோடி மற்றும் ஜெட்லி மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால், மோடி மீதும் ஜெட்லி மீதும், அ.தி.மு.க., தரப்பில் கடும் கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.