Monday , November 18 2024
Home / முக்கிய செய்திகள் / தமிழர்களின் பிரச்சினையை மோடியின் கவனத்திற்கு கொண்டுவர தீர்மானம்

தமிழர்களின் பிரச்சினையை மோடியின் கவனத்திற்கு கொண்டுவர தீர்மானம்

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி பாரத பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு, அநேகமாக 12ஆம் திகதி கூட்டமைப்பை சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசவுள்ளதாக சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

பாரத பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது யாழ்ப்பாணத்திற்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, மலையகத்திற்கும் செல்லவுள்ளார்.

பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக கொழும்பில் மாத்திரம் சுமார் ஆறாயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv