Thursday , October 16 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

மெக்சிகோ தென் கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5 பேர் பலியாகினர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0-ஆக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தகவலில், “மெக்சிகோவின் தென் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான கவுத்தமாலாவில், ரிக்டர் அளவுகோலில் 8.0 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்த நிலநடுக்கம் தென்மேற்கே உள்ள பிஜிஜப்பான் நகரிலிருந்து 123 கிலோமீட்டர் தொலைவில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், ”சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 3 அடி உயரத்துக்கு கடலில் அலைகள் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் குறித்து மெக்சிகோ நகரவாசி லுயிஸ் கேர்லோஸ் கூறும்போது, “இந்த மாதிரியான அனுபவத்தை நான் இதற்கு முன்னர் உணர்ந்ததில்லை. எனக்கு முதலில் சிரிப்பாக இருந்ததது. விளக்குகள் அணைக்கப்பட்டப்பிறகு நான் கீழே விழுந்துவிட்டேன்” என்றார்.

சிறிய அளவில் ஏற்பட்ட சுனாமி அலைகள் காரணமாக வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

https://www.youtube.com/watch?v=MmELB4zk5-Q

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …