Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சம்பந்தனிற்கு பேரிடியான செய்தி!! பெரு மகிழ்ச்சியில் மகிந்த

சம்பந்தனிற்கு பேரிடியான செய்தி!! பெரு மகிழ்ச்சியில் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

சபாநாயகரின் இத்தீர்மானத்தை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார்.

புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று கூடியது. இதன்போதே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் நியமித்திருந்தார். இந்நியமனம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தோற்றம் பெற்றதையடுத்து இது குறித்து தெரிவுக்குழு அமைத்து ஆராயுமாறு கோரப்பட்டது.

அதனை ஏற்ற சபாநாயகர் அது குறித்து ஆராய்வதாகவும் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் குறித்த தீர்மானத்தை இன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவியிலிருந்து விலகுகிறாரா சம்பந்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ ஆகிய சொற்பதங்கள் சம்பந்தமாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான அறிவிப்பையும் சம்பந்தன் இந்தக் கூட்டத்தில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகின்றது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv