Monday , October 20 2025
Home / முக்கிய செய்திகள் / மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவு; பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவு; பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்திலுள்ள குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மீத்தொட்டமுள்ள குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் அரசாங்க செலவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் கூடிய கொழும்பு மாவட்ட இணைப்பு கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மாலை மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் 145 வீடுகள் சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv