மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து!
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கோத்தபாயவிற்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாளை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கோத்தபாய ராஜபக்க்ஷவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

