மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு!
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சியை மைத்திரிபால சிறிசேனவே வழிநடத்துவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பொதுக் கூட்டணியாக களமிறங்கும் என்றும், சின்னமும் பொதுவான ஒன்றாக இருக்கும் எப்னவும் அவர் கூறியுள்ளார்.
நாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே நாம் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்ட ரோகன லக்ஸ்மன் பியதாச, எது எப்படி இருப்பினும் சுதந்திர கட்சியை மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.