நள்ளிரவு முதல் கோதுமை விலை உயர்த்த முடியாது! மங்கள
கோதுமை மாவின் விலையினை பிரிமா நிறுவனம் அதிகரித்திருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லையென விளக்கமளித்துள்ளார்.
நாளைய தினம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சியே இதுவென தெரிவிக்கின்ற அவர், விலையுயர்வுக்கு முன்னால் அமைச்சரவை மற்றும் நுகர்வோர் அதிகார சபை அனுமதிகள் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவ்வாறு எதுவும் வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
இப்பின்னணியில்வ வியாபாரிகள் ஒரு சதமேனும் அதிகமாக அறவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மங்கள தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.