Monday , August 25 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஜேர்மனியில் மர்ம நபர் கத்தித் தாக்குதல்

ஜேர்மனியில் மர்ம நபர் கத்தித் தாக்குதல்

ஜேர்மனியின் தென் பிராந்திய நகரான முனிச்சில், நபரொருவர் கத்தியால் தாக்கியதில் ஐந்து பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். எனினும், தாக்குதல்தாரியை பொலிஸார் கைது செய்தனர்.

திடீரென நடத்தப்பட்ட இத்தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், சைக்கிளில் தப்பியோடிய தாக்குதல்தாரியைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.

எனினும், தாக்குதல்கள் வேறு எவராலும் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தினால், அப்பகுதி மக்கள் வீடுகளையும், கட்டடங்களையும் விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க அந்நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …