Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / சம்பளத்தில் கோடியை தொட்ட மலர் டிச்சர் !

சம்பளத்தில் கோடியை தொட்ட மலர் டிச்சர் !

பிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி அந்த படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் சுமார் 1 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார்.

அப்போதும் இவருக்கு பட வாய்ப்பு குவியத் துவங்கியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வரும் சாய் பல்லவி தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளாராம்.

தற்போது தமிழில் விஜய் இயக்கத்தில் கரு, செல்வராகவன் இயக்க சூர்யா நடிக்கும் படம், தனுஷின் மாரி 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும், தெலுங்கில் இரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

சர்வானந்த் நடிக்கும் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒரு கோடியே 40 லட்சம் வாங்கியிருக்கிறாராம். படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, சீன் போடுவது, அடாவடியாக நடந்துக்கொள்வது என இவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், இவருக்கு பட வாய்ப்புகள் குறையாமல் சமபளம் உயர்ந்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv