தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான மேஜர் பசீலனின் தாயார் தனது 86 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஐந்தாம் திகதி உயிரிழந்த அன்னாரின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
முல்லைத்தீவில் வசித்து வந்த பசீலனின் தாயாரான நல்லையா தங்கம்மா சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் உலகமே வியந்த ஒப்பற்ற தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் தளபதியாக மேஜர் பசீலன் செயற்பட்டிருந்தார்.
மேஜர் பசீலனின் நினைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் பசீலன் 2000 என்ற எறிகணை உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.