Wednesday , July 9 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மோடியை பார்த்து விட்டு நாடு திரும்பினார் மைத்திரி…

மோடியை பார்த்து விட்டு நாடு திரும்பினார் மைத்திரி…

இந்திய பிரதமராக மீண்டும் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.20 மணிக்கு புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.196 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஹைதராபாத் ஹவுசில் நேற்று காலை 10.50 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர்.

இதன்போது இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv