Wednesday , February 5 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரி, மஹிந்த நேரடிப் பேச்சு! கொழும்பு அரசியலில் பரபரப்பு

மைத்திரி, மஹிந்த நேரடிப் பேச்சு! கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து மஹிந்தவும்,மைத்திரியும் நேரடியாகச் சந்தித்து பேசுவது நல்லது என்று பொது எதிரணியின் முக்கிய உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் பரஸ்பரம் தீர்மானம் ஒன்றை எடுத்ததை அடுத்தே இருவரும் நேரில் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக மேற்படி இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.பி.ரத்நாயக்க, மஹிந்தானந்த அழுத்கமகே ஆகியோர் பொது எதிரணி சார்பிலும் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

அதனையடுத்தே இந்த நேரடி சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொள்வதென இரு தரப்பிலும் பரஸ்பரம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

அரசுக்குள் தனக்கு எதிராக சதி முயற்சிகள் நடப்பதாக சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பகிரங்கமாக சொல்லியிருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv