ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் மீண்டும் சந்திக்க உள்ளனர்.
இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அதற்கு வெளியே உள்ள அரசியல் கட்சிகளுடன் புதிய கூட்டமைப்பினை கட்டியெழுப்புவது தொடர்பில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைர்கள் கூட்டமொன்றில் இணக்கம் காணப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்படுவதற்கு முன்னதாக இந்த புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.