முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது,
“ரணிலுடன் இப்போது மற்றுமல்ல எதிர்காலத்திலும் கூட இணைந்து பணியாற்றும் விருப்பம் எனக்கு இல்லை. இதுவே எனது தீர்க்கமான முடிவாகும்.
மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவரை பிரதமராக தெரிவு செய்ய முடியுமென அரசியலமைப்பில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஜனாதியினால் பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்படுகின்றமை குறித்து அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் ரணில் மீதுள்ள அச்சத்தின் காரணமாகவே பிரதமர் பதவியை ஏற்கவில்லை.
அந்தவகையில் தற்போதைய அரசியல் பிரச்சினைக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் தீர்வு எட்டப்படாவிடின் பொதுத் தேர்தலுக்கு செல்வதே சிறந்தது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.